உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியமை மற்றும் டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தமை இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
அதன்படி தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 195 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.