கனடா – ஆண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கனடாவுக்கான இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவர்கள் பயணித்த சிற்றுார்ந்து முன்னால் சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா தெரிவித்துள்ளார்.