Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டணம் குறைக்கப்படாததால், மதத்தளங்கள் இருளில் மூழ்கடிக்கப்படும்

கட்டணம் குறைக்கப்படாததால், மதத்தளங்கள் இருளில் மூழ்கடிக்கப்படும்

விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் மின் கட்டணம் குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போயா, நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இருளில் முழ்கச் செய்யப்படும் என கலஹா சிறிசாந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இடம்பெற்ற போயா தின சமய வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

அதிகரித்த மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்திய போது, ​​பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கண்டிக்கு வந்து மல்வத்து அஸ்கிரிய உள்ளிட்ட மும்மதத் தலைவர்களையும், மதச்சார்பற்ற தலைவர்களையும் சந்தித்து மின்கட்டண சலுகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரிவெனாக்களுக்கு சூரிய சக்தி திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் தயாரிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த வாக்குறுதியின்படி இது வரை மின் கட்டணம் குறைக்கப்படவில்லை. சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படவில்லை.

இவர்கள் மிகவும் இரக்கமற்ற முறையில் முற்பிதாக்களையும், மதத் தலைவர்களையும் அமேற்றியுள்ளனர்.

இந்த மாயையை தொடர அனுமதிக்க மாட்டோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles