அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறிய இன்று முதல் சோதனை நடத்தப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களை அடையாளம் காண நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, கால்நடை தீவன விலையும் குறைந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கோழிப்பண்ணை வியாபாரிகள் பலர் தமது பண்ணைகளை மூடியுள்ளதால், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் கிட்டத்தட்ட 50% கோழிப்பண்ணைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.