Saturday, July 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்கவை காப்பாற்ற முயற்சித்தாரா நாமல்?

தனுஷ்கவை காப்பாற்ற முயற்சித்தாரா நாமல்?

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவை பாதுகாக்குமாறு நாமல் ராஜபக்ஷ MP ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை பணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏதேனும் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை பாதுகாத்து நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு நாமல் கோரியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை நாமல் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தம் மீது இவ்வாறான குற்றச்சாட்டை சொல்வது முழு நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அத்துடன் தாம் பதவி விலகியதன் பின்னர் எந்த அடிப்படையிலும் தேசிய விளையாட்டுத்துறையில் தலையிட்டதில்லை எனவும், நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles