Saturday, April 11, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

8 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

பேருவளை – அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோகிராம் 304 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை – அபேபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​7 பொதிகளில் இந்த ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (07) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles