கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 36 பேர் திடீர் சுகயீனம் காரணமாக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம், தலைசுற்று போன்றன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவர்கள் தற்போது வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், உணவு ஒவ்வாமையின் காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது