இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு போதுமான நிதியில்லை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு போதுமான நிதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் அன்றாட பணிகளுக்காகவும், தேர்தல்கள் குறித்த பணிக்காகவுமே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.