Sunday, August 31, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன்!

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன்!

நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) பகல் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டான மேற்கு பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து, மதிய உணவு தயாரிக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் விமர்சித்த போது, ஏற்பட்ட தகராறு காரணமாக, மகளை தாக்கியுள்ளார்.

இதன்போது, சகோதரி தாக்கப்பட்டதால் கோபமடைந்த மகன், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles