சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (14) நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு, உதவி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.