Sunday, July 27, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது

பாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக பெண் ஒருவரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் சிட்னியில் உள்ள வீடொன்றில் நடந்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க நேற்று இரவு இலங்கை அணி தங்கியிருந்த விருந்தகத்தில் வைத்து கைதானார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles