மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இரத்தக் கொதிப்பு நோயினால் சுமார் 100 மாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.பாசி தெரிவித்துள்ளார்.
இந்த தொற்று நோய் காரணமாக செங்கலடி உட்பட சில பிரதேசங்களிள் தடுப்பூசி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூச்சு விடுவதில் சிரமம், சாப்பிடாமல் இருப்பது, வாயில் இருந்து சளி வெளியேறுவது, நடக்க இயலாமை போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
இதனடிப்படையில், மாதிரிகள் மட்டக்களப்பு விலங்குகள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பேராதனை விலங்குகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட பண்ணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணத்தில் 50இ000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.