ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் காலத்தில் மேலும் சில அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.
அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு மேலும் அமைச்சர்களை நியமிக்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் முன்னதாக கோரியிருந்தது.
வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமையஇ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்இ பொதுஜன பெரமுனவின் பவித்ரா வன்னியாராச்சிஇ சி.பி.ரத்னாயக்க மற்றும் எஸ்.எம்.சந்ரசேன ஆகியோருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளைஇ ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களும் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.