Wednesday, May 28, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்.விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஜனவரி முதல் மீள இயக்க நடவடிக்கை

யாழ்.விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஜனவரி முதல் மீள இயக்க நடவடிக்கை

200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிறுவப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நேற்று விஜயம் செய்த போதே இதனை தெரிவித்தார்.

இந்த பொருளாதார மையம் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டாலும், தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் அமைப்பு கோளாறுகள் காரணமாக மீண்டும் மூடப்பட்டது.

அதற்கமைய, குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளைப் பூரணப்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles