அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்த தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த ஒபாமா, கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் தமது மனைவியும் மூன்றாவது செயலுாக்கி தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
எனினும் தனது மனைவி மிச்சேலுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை எனக் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தடுப்பூசி இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்களை உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.