முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று கடந்த 27ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிராக சுற்றாடல் நீதி மையம், ஜனாதிபதி, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை சூரிய சக்தி அதிகார சபை உள்ளிட்ட பிரதிவாதிகள் பலருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் இனி பிரதிநிதித்துவப்படுத்தப்படாது என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் உண்மைகளை உறுதிப்படுத்த இந்த வழக்கை ஜனவரி 23, 2023 அன்று மீண்டும் கூட்ட உத்தரவிடப்பட்டது.