நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏறக்குறைய 3 வாரங்கள் தங்கியிருந்து கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் 500,000 ரூபாவுக்கு மேல் ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குறித்த விடுதிக்கு சென்று சுமார் மூன்று வாரங்கள் அங்கு தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், உரிய தொகையை செலுத்துவதாக சந்தேக நபர் ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்ற பின்னர் ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் அவர் விகாரைக்கு திரும்பச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த ஹோட்டல் நிர்வாகம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் புகார் அளித்துள்ளது.
அதற்கமைய, குறித்த பிக்கு சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.