Saturday, July 26, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று மற்றுமொரு விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இலங்கை வங்கி, நிதியமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதன்படி, கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான ஆதரவைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக முன்னதாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டதோடு அதன் தொடர்ச்சியாக இன்றைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles