Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் 250 ரூபாவாக குறையுமாம்

டொலர் 250 ரூபாவாக குறையுமாம்

IMF வழங்கும் கடன் வசதிக்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்திற்குள் கைச்சாத்திடப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இலங்கையில் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துடன் சூம் வழியாக கலந்துகொண்டனர்.

இதன்போது ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் திகதிகள் சகிதம் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் கூறினார்.

அதேநேரம் நாட்டில் தற்போதைய நிலைமை தொடருமானால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் டொலரின் பெறுமதியை 250 ரூபா வரை குறைக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles