Sunday, December 21, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்நைஜீரியாவில் 39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

நைஜீரியாவில் 39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவர்களை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு வெளியே உள்ள பண்ணையொன்றில் கூலிக்கு பயிர்களை அறுவடை செய்து கொண்டிருந்த 39 சிறுவர்களை, உந்துருளியொன்றில் வந்த துப்பாக்கிதாரிகள் இவ்வாறு கடத்தியுள்ளதாக கட்சினா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காம்போ இசா கூறினார்.

பண்ணைக்குள் கொள்ளையர்கள் நுழைந்தபோது, அங்கு பணிபுரிந்த பெரியவர்கள் தப்பியோடியதாகவும், துரதிஷ்டவசமாக சிறுவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், சம்பவத்தை நேரில் அவதானித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சிறுவர்கள் 15 – 18 வயதுகளுக்கு இடைப்பட்டர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்திய சிறுவர்களை விடுவிப்பதற்கு, குறித்த பண்ணையாளரிடம், 50000 அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்கள் கப்பமாக கோரியுள்ளதாகவும், கடத்தப்பட்ட ஒருவரிடமிருந்த கைப்பேசி மூலம் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பணயக்கைதிகளை மீட்பதற்கும் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கும் அப்பகுதிக்கு தமது குழுவினர் விரைந்துள்ளதாக என்று அவர் கட்சினா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காம்போ இசா மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles