Saturday, May 10, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்சிறுமியை காப்பாற்ற சென்ற கே பொப் பாடகர் நெரிசலில் சிக்கி பலி

சிறுமியை காப்பாற்ற சென்ற கே பொப் பாடகர் நெரிசலில் சிக்கி பலி

தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தென் கொரிய கே – பொப் பாடகர் லீ ஜி ஹான் (24) என்பவரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியொருவரை காப்பாற்ற முயன்ற போதே குறித்த பாடகர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்தபட்சம் 150 பேர் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும், பலர் இன்னும் காணவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கே பொப் பாடகரின் மரணம் தொடர்பில் அவரின் நண்பர் பகிர்ந்து இரங்கலை தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles