Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என கூறுபவர்கள் பைத்தியக்காரர்கள் - டயனா கமகே

தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என கூறுபவர்கள் பைத்தியக்காரர்கள் – டயனா கமகே

தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவ்வாறு கூறுபவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை எவரும் நிரபராதிகள் என குறிப்பிட்டுள்ளார்.

“சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதி தான். இந்தக் குற்றம் சாட்டுபவர்கள் பைத்தியக்காரர்கள். நான் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்றால் அதை நிரூபிக்க வேண்டும்” vd;whu;என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles