Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்இம்ரான் கானின் வண்டி சில்லில் சிக்கி பெண் ஊடகர் மரணம்

இம்ரான் கானின் வண்டி சில்லில் சிக்கி பெண் ஊடகர் மரணம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சதாஃப் நயீம் எனும் 40 வயதான ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குஜ்ரன்வாலா மாவட்டத்தின் சதோக் நகரில் ஞாயிற்றுக்கிழமை (30) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பி.டி.ஐ. கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூர் நகரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட அணிவகுப்பு என்ற தொனிப்பொருளில் கீழ் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றார்.

இப்பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செனல் 5 எனும் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான சதாஃப் நயீம், இம்ரான் கான் பயணித்த கொள்கலன் வாகனத்தில் நசுங்கி உயிரிழந்தார்.

இம்ரான் கானின் குரல் பதிவொன்றைப் பெறுவதற்காகக் கொள்கலன் வாகனத்தில் ஊடகவியலாளர் சதாஃப் நயீம் ஏற முயன்றநிலையில், தவறி வீழ்ந்தார் எனவும், அதன்பின் அவரின் தலைமீது வாகனத்தின் சக்கரம் ஏறியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles