இந்த ஆண்டு (2022) ஆரம்பத்தில் இருந்து ஜூன் வரை இலங்கையின் மொத்த கடன் தொகை 6675 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
டிசம்பர் 2021 இறுதியில் ரூ. 17589.4 பில்லியனாக இருந்த கடன் தொகை , கடந்த ஜூன் மாத இறுதியில் ரூ. 24264.4 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (2022) மொத்த பொதுக் கடனில் மொத்த உள்நாட்டுக் கடன் ரூ. 11097.2 பில்லியநிலிருந்து கடந்த ஜூன் மாத இறுதியில் ரூ. 12738.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதேவேளை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ. 17589.4 பில்லியனில் இருந்து ரூ. 24264.4 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.