Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலியில் 800 சிறுவர்களுக்கு போசணை குறைபாடு

காலியில் 800 சிறுவர்களுக்கு போசணை குறைபாடு

காலி மாவட்டத்தில் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 800 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளைத் தவிர, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தில் 24,000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாரிய உணவுப் பாதுகாப்பு அபாயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாதம்பகம, ஹிக்கடுவ மற்றும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் மாவட்டச் செயலாளர் வலியுறுத்தினார்.

இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலையீட்டின் ஊடாக உலர் உணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை இந்தக் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles