Saturday, January 31, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிகள் யாரும் இல்லை

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிகள் யாரும் இல்லை

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அனைத்து அமைச்சர்களின் பிறந்த நாள் மற்றும் தேசிய அடையாள அட்டை விபரங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்டது.

அதற்கமைய, இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என அத் திணைக்கனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles