Saturday, January 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டியே பின்பற்றி வருகிறோம்.

அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தடுத்துவைக்கப்பட்டு உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles