முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர நியூஸ் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.