விசேட பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் அழைத்து செல்லப்பட்ட பிரமுகர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளுக்கு அப்பால் இந்த விசேட பிரமுகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எவ்வித பதிவும் குறிப்புகளும் இன்றி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களை பரிந்துரைப்பதற்குப் பதிலாக, வேறு வேறு வைத்தியசாலைகளில் இருந்து விசேட வைத்தியர்கள் குழுவொன்று சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டுள்ளமையும் இந்த அனுமதியின் மற்றுமொரு விசேட அம்சமாகும்.
மேலும் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் காவலர்களை வைத்து சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விசேட பிரமுகர் யார் என விசாரணை நடத்திய போது அவர் முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.