பெரும் போகத்துக்கான 13,000 மெற்றிக் டன் யூரியா உரம் கப்பலிலிருந்து இன்று (28) தரையிறக்கப்படுகிறது.
யூரியா உர தொகையை தாங்கிய முதலாவது கப்பல் நேற்று (26) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும் இம்முறையும் ஒரு மூட்டை உரம் 10,000 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பருவத்தில் வழங்கப்பட்ட யூரியா உர மூட்டைகள் சரியான எடையில் இல்லை என சிலர் குற்றம் சுமத்தினர்.
இம்முறை ஊடகங்கள் முன்னிலையில் எடையை எடைபோட்டதாகவும், ஒவ்வொரு உர மூட்டையும் சரியான நிறையுடன் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.