Saturday, May 10, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு231 வகையான மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன

231 வகையான மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன

அடுத்த சில மாதங்களில் 231 வகையான மருந்துகள் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சீன மனிதாபிமான உதவி, உள்ளூர் உற்பத்திகள், அவசரகால கொள்முதல், ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கடன் மானியங்கள் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய கடன் வசதி ஆகியவற்றின் ஒரு பகுதியாக மருந்துகள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பஞ்சு,சேலைன் , வெறிநாய் எதிர்ப்பு மருந்து, பாம்பு விஷத்திற்கான மருந்து, பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் உள்ளதாக மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.ஆர்.கே.ஹேரத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles