Wednesday, November 26, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி விரைவில்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி விரைவில்

அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த விரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 6 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வெளிநாடு செல்வோருக்கு மாத்திரம் அட்டைகளில் அச்சிடப்படும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles