Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் க்ரிப்டோ கரன்சி போர்வையில் நிதி மோசடி

இலங்கையில் க்ரிப்டோ கரன்சி போர்வையில் நிதி மோசடி

கிரிப்டோ கரன்சி என்ற ரீதியில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, இந்த பாரிய நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி தொடர்பான விசாரணையில், கீர்த்தி பண்டார என்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரும் சீன பிரஜைகள் இருவரும் இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இரு சீன பிரஜைகளும் செப்டெம்பர் 12ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த முயற்சித்த போதிலும், அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2020 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு நபர்களிடமிருந்து க்ரிப்டோ கரன்சி என்ற போர்வையில் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்காக தனிப்பட்ட கணினி மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கிரிப்டோ கரன்சியை கொள்வனவு செய்ய முடியும் என ஏமாற்றி இந்தத் தொழில் முன்னெடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles