Friday, May 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி அறவிடுவதை தவிர வேறு வழி இல்லை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வரி அறவிடுவதை தவிர வேறு வழி இல்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை கோருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு வரி அறவிடுவதை தவிர வேறு வழிகள் இல்லை என அவர் இன்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

18 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் சமூர்த்தி உதவிகளை பெறுகின்றனர்.

4 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிக குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் முதியோர் கொடுப்பனவை பெறுகின்றனர்.

இதுதவிர, விசேட தேவையுடையோர் மற்றும் ஏனைய நிவாரணங்களையும் பலர் பெறுகின்றனர்.

இதற்கு மேலதிகமாக புதிதாகவும் உள்வாங்கப்படவுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், வரி அறவிடுவதன் மூலமே அந்த கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles