Friday, September 19, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎனது மகன் காலிக்கு கூட சென்றது இல்லை - மஹிந்த அமரவீர

எனது மகன் காலிக்கு கூட சென்றது இல்லை – மஹிந்த அமரவீர

யால சம்பவத்துடன் தனது மகனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை எனவும், தனது மகன் காலிக்கு கூட சென்றதில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவ தினத்தன்று தனது மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மகன் காலிக்கு கூட சென்றதில்லை. அவர் எங்கேயும் தனியாக செல்ல மாட்டார். நான் வெளியூர் சென்றிருந்த போது அவர் மேற்கொண்ட ஒரே பயணம் மத்துகமவில் உள்ள உறவினர் வீட்டுக்கு மட்டுமே. அவர் கொழும்பிற்கு வெளியே சுமார் 10 நாட்கள் மட்டுமே சென்றுள்ளார் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles