ராஜபக்ஷவினரே நாட்டை அழித்தனர் எனவும் கொள்ளையடிக்கும் சுவையை உணர்ந்ததாலேயே அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதில் தேரர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசாய விகாரையில் பதவியேற்றது சாபக்கேடு, அந்த சாபமே அவருக்கு பலித்துள்ளது .
மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களுக்கு உண்பதற்கும் உணவுகள் இல்லை.
மக்கள் மூச்சு விடுவதற்கும் வரிகள் அறவிடப்படும் நிலை உருவாகியுள்ளது.
ராஜபக்ஷவினருக்கு மீண்டும் வாக்களிப்பவர்கள் ஐந்தறிவு கொண்ட மாடுகளை விட கேவலமான மனித விலங்குகளாக இருப்பார்கள் என்றார்.