இரட்டை குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைப் பெற்று அவற்றைப் பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பஃவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
அதற்கு அமைய பஃவ்ரல் அமைப்பு இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை வெளியிடுமாறு கோரி சபாநாயகருக்கும் குடிவரவு குடியகல்வு துறை திணைக்களத்திற்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
தற்போது இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு பெயர்கள் உலவுவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களின் தகவல் கிடைத்ததும் அதனை வெளியிடுவோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பதவி விலகாவிட்டால் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.