Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேரர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர், 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தேரரை வைத்தியாலையில் அனுமதிப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இன்று(26) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles