Monday, September 22, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்உலகின் மிக அழுக்கான மனிதர் காலமானார்

உலகின் மிக அழுக்கான மனிதர் காலமானார்

உலகின் மிகவும் அழுக்கான மனிதராகக் கருதப்படும் ஈரான் நாட்டைச் சேர்ந்த அமு ஹாஜி உயிரிழந்துள்ளார்.

அவர் தனது 94 ஆவது வயதில் காலமானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.

இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பின்னர் கடந்த மாதம் அவர் முதல் முறையாக குளித்துள்ளார்.

அவர் சோப்பு மற்றும் தண்ணீரை மறுத்ததற்குக் காரணம்,அவருக்கு நோய்கள் வந்துவிடுமோ என்ற பயம்தான் என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஃபார்சி கிராம மக்கள் இவரை குளித்து சுத்தம் செய்ய எடுத்த முயற்சிகளை அவர் தடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles