Monday, September 22, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு

அமெரிக்க மிசோரியில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர் மரணமாகினர். அத்துடன் ஏழு பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிதாரி திங்களன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 9:00 மணியளவில் பாடசாலைக்குள் பிரவேசித்துள்ளார்.

பாடசாலைக் கட்டிடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

துப்பாக்கிதாரியின் ஆயுதம் இடையில் செயற்படாமை காரணமாகவே உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கிதாரி 19 வயதுடைய முன்னாள் மாணவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

எனினும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானார்.

சுமார் 400 மாணவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் அவர் நடத்திய தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக தெரிய வரவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles