சுற்றுலாத்துறையின் சில அதிகாரிகள் அதன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், நாம் ஏதாவது செய்வதற்கு ஆயத்தமாகும் போது காலை வாரி விட காத்திருப்பதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
இவ்வாறான அதிகாரிகளின் நடவடிக்கைகள் மாறாவிட்டால் நாடு மீள முடியாது எனவும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் சுற்றுலாத்துறையின் விரைவான அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.