2015-2019 காலகட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் தமது அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களின் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.
இதன்படி, சுகாதார அமைச்சர் 16 வாகனங்களையும், இராஜாங்க அமைச்சர் 8 வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அமைச்சருக்கு வருடாந்த எரிபொருள் கொடுப்பனவாக 20 இலட்சம் ரூபாவும், இராஜாங்க அமைச்சருக்கு 40 இலட்சம் ரூபாவும் அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை விட மேலதிகமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Lankadeepa