தனியார் மருந்தகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல அரச வைத்தியசாலைகளில் காயங்களுக்கான மருந்து மற்றும் ஏனைய பொருட்கள் என்பன இன்மையினால் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நோயாளர்களுக்கான மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்கள் பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.