Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபகிடிவதை என்பது ஒரு மனநோய் - நிமல் சிறிபால டி சில்வா

பகிடிவதை என்பது ஒரு மனநோய் – நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பல்கலையில் இணையும் புதிய மாணவர்கள் மீதான பகிடிவதைக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அறிக்கைகளை வெளியிட்டமை சாதகமான நிலைமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பகிடிவதை என்பது ஒரு மனநோய். இதனை முன்னெடுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பிடித்து மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், புதிதாக இணையும் பல்கலை மாணவர்களை சித்திரவதை செய்வது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முன் வந்து இதைப் பற்றிப் பேசுவதுமகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Keep exploring...

Related Articles