அக்டோபர் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு திறைசேரியிடம் போதிய பணம் இல்லை என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிதியமைச்சகம் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.