21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தற்போது இயங்கி வரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவடையும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட வுள்ளதாகவும், அரசியலமைப்பு சபை நியமனத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய தேர்தல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு போன்றவை அதில் அடங்கும்.