சீனி மற்றும் பருப்பின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
சீனி 250 ரூபாவில் இருந்து 235 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
400 ரூபாவில் இருந்த பருப்பு கிலோ ஒன்று தற்போது 360 – 380 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையும் 260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.