நாட்டின் பிரபல கோடீஸ்வரர்கள் பலரிடம் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பான பல தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்இ திலினி பிரியமாலி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சமூகத்தின் பல முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய நாளிதழ் நடத்திய விசாரணையில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், ‘முற்றிலும் எதிர்பாரா நபர்கள் தொடர்பிலும்றி சிஐடி தகவல் திரட்டியுள்ளதாக’ தெரிவித்தார்.
திலினியின் கைப்பேசி மற்றும் பிற கணினி சாதனங்களை ஆய்வு செய்த போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், உதவி தேவைப்படும்போது அவர்களை மிரட்டி தனக்கு வேண்டியதைச் செய்து கொள்வதற்காக குறித்த நபர்களுடனான உரையாடல்களை அவர் பதிவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.