Wednesday, May 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு - குருநாகல் வீதியில் விபத்து: தாயும் மகனும் பலி

கொழும்பு – குருநாகல் வீதியில் விபத்து: தாயும் மகனும் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் அவரது பதின்ம வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும் அவரது 18 வயது மகனும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles