சுமார் 100 குழந்தைகள் இறந்ததையடுத்து, அனைத்து சிரப்கள் மற்றும் திரவ மருந்துகளின் விற்பனையை நிறுத்த இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் குழந்தைகளின் உயிரைப் பறித்ததாக சந்தேகிக்கப்படும் மருந்து இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இந்த மருந்தை பயன்படுத்திய சுமார் 200 குழந்தைகள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காம்பியாவிலும் இருமல் சிரப்பை பயன்படுத்தி சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்ததைமை குறிப்பிடத்தக்கது.